Home செய்திகள் சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை மற்றும் சிட்டாடைன்ஸ் ஓஎம்ஆர் சென்னை அஸ்காட் கேர்ஸ் திட்டத்தின் கீழ் சமூக நலனுக்கான உறுதிமொழி..

சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை மற்றும் சிட்டாடைன்ஸ் ஓஎம்ஆர் சென்னை அஸ்காட் கேர்ஸ் திட்டத்தின் கீழ் சமூக நலனுக்கான உறுதிமொழி..

by Askar

சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை மற்றும் சிட்டாடைன்ஸ் ஓஎம்ஆர் சென்னை அஸ்காட் கேர்ஸ் திட்டத்தின் கீழ் சமூக நலனுக்கான உறுதிமொழி..

சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை & சிட்டாடைன்ஸ் OMR ஆதரவற்ற பாத்திமா குழந்தைகள் நல மையம் மற்றும் உதவும் உள்ளங்கள் பொது அறக்கட்டளை ஆகியவற்றுடன் அஸ்காட் கேர்ஸ் ( சமூகம், கூட்டணி, மரியாதை, சுற்றுச்சூழல், வழங்கல் சங்கிலி ) முயற்சியின் கீழ் ஆதரவற்ற இல்லம் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நிதியை வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் மேம்பாட்டு மையங்கள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை வழங்குகிறது. தி அஸ்காட் லிமிடெட் இந்தியாவின் வட்டார பொது மேலாளர் திரு. ரோகன் ராகென்தத், சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை பொது மேலாளர் திரு. மன்சூர் அகமது, சிட்டா டைன்ஸ் OMR சென்னை பொது மேலாளர் பிரசாந்த் ராஜ்குமார், திருமதி ராணி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்னை பாத்திமா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் செயலாளர், உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் நிறுவன சங்கர் மகாதேவா ஆகியோர் உடன் இருந்தனர்.

அஸ்காட் லிமிடெட் இந்தியாவின் பகுதி பொது மேலாளர் திரு. ரோகன் ராகென்தத் பேசுவையில், எங்கள் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரப் பகுதிகளில் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்த ஆஸ்காட்டில் உள்ள நாங்கள் எப்பொழுதும் விரும்புகிறோம் என்றார்.  அஸ்காட் கேர்ஸ் ‘ என்ற எங்களின் நிலைத்தன்மை திட்டத்தின் மூலம் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது என்றும் கூறினார். அன்னை பாத்திமா குழந்தைகள் நல மையம் மற்றும் உதவும் உள்ளங்கள் பொது அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்பு, நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு சான்று ஆகும் என்றும் அவர் கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com