திண்டுக்கல்லில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது ..வீடியோ..

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கைது.

கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழகம் முழுவதும் தங்களது 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர்