நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை நகர எல்லைக்குள் அமைக்க கோரியும், காட்டு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தாலுகா அலுவலகம் நகர எல்லையிலேயே அமையும் என வருவாய் துறை அமைச்சர் 3 முறை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் விரோத இந்த எடப்பாடி அரசு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காட்டு பகுதியில் இரவு நேரத்தில் பூமி பூஜை நடத்தி உள்ளது.
அனைத்து பணிகளையும் நிறுதி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் நகர எல்லையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல், கருப்பு கொடி ஏற்றுதல் என தொடர் போராட்டங்கள் நடத்தபடும். மேலும் அனைத்து எதிர்கட்சிகளை ஒன்றினைத்து சட்டசபையில் சிறப்பு கவண ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார்.
செய்தி:- கடையம்: பாரதி
You must be logged in to post a comment.