கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி முகாம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, மற்றும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை ஏற்பாட்டில் சுகாதாரத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கண்ணாடி வாப்பா வளாகத்தில் (பழைய அப்சரா தியேட்டர்) கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ரசிக்தீன் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் சேக் உசேன், கண்ணாடி வாப்பா அறக்கட்டளையின் சார்பில் சித்திக் கலந்து கொண்டனர். இதில் 292 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.