கீழக்கரையில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி ……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழாவை வள்ளல் சீதக்காதி சாலை இந்து பஜாரில் நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.அஜ்மல் கான் தலைமையிலும்,  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் KRD.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் ஹமீதுகான், முருகானந்தம், சந்திரசேகர், சித்திக் உசைன், நகர் நிர்வாகிகள். KRDK. கார்த்திக், முகம்மது அப்துல்காதர் (எ)பேங்க் மறைக்கா,  நகர் பொது செயலாளர் ரகுமத்துல்லா எஸ்.கணேச மூர்த்தி, நகர்இளைங்கர் காங்கிரஸ். சித்திக் மறைக்கா, பொதுமக்கள் பொதுமக்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.