
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் மூர்த்தி 119ஆம் பிறந்தநாள் விழா முன்னிட்டு காமராஜர் சிலை மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். காங்கிரஸ் கட்சியின் INTUC அணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வந்தவாசி நகர தலைவரும் INTUC மாநில செயலாளர் எஸ். யூனிஸ் கான் தலைமையில் நடைபெற்றது. INTUC திருவண்ணாமலை மண்டல தலைவர் எம். மணவாளன் வரவேற்புரை யாற்றினார். INTUC தொகுதி தலைவர் மஸ்தான், தொகுதி பொதுச் செயலாளர் பாபு, தொகுதி செயலாளர் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.INTUC மாவட்ட செயலாளர் சதாம் உசேன், செல்வம், டெய்லர் மணி,சம்பத் மற்றும் மாவட்ட ,நகர நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பரணி குமார் நன்றி உரையாற்றினார்.
You must be logged in to post a comment.