உசிலம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தபெண் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்ட கருப்பு கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபால்ராஜ் மனைவி தேவகி(55). இவர் உசிலம்பட்டி உசிலம்பட்டி பகுதியின் முக்கிய பகுதியான நாடார் புது தெரு,நகை கடை தெரு,ஜவுளிகடை தெரு, நந்தனவன தெரு உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருவதாக உசிலம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான போலீசார் நகைகடை தெரு உள்ளிட்ட தெருக்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகை கடை தெருவில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த தேவகியை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலைசிந்தனியா