கீழக்கரையில் தனியார் கட்டிடத்தில் திருட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லீம் பஜார் லெப்பை டீக்கடை அருகில் உள்ள கம்சான் காம்ப்ளக்ஸில் மூன்றாவது மாடியில் கஸ்டம்ஸ் ரோடு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் நூருல் அமீன் என்பவர் அறை எடுத்து வசித்து வந்தார்.  அவர் அதிகாலையில் அறையிலிருந்து இருந்து வெளியேறிய பின்பு 11 மணி அளவில் அரைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அறையின் கதவு உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.

உடனடியாக கீழக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, காவலர் இளமுருகன், தனிப்படை காவலர் சேகர் அறையை பார்வையிட்டனர் பின்பு ராமநாதபுர மாவட்ட கைரேகை தடயவியல் நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.