காமராசரின் பிறந்த நாள் விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புடவை வேஷ்டி சட்டை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா புத்தகம் ஆகியவற்றை வழங்கி விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் காமராசர் 119 ஆம் பிறந்த நாள் விழாவையொட்டி காமராசர் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் கே.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புடவை வேஷ்டி சட்டை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா புத்தகம் ஆகியவற்றை வழங்கி விழா கொண்டாடப்பட்டது அறக்கட்டளையின் தலைவர் ஏழுமலை நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது காமராசரின் வரலாற்றையும் வாழ்க்கை முறை பின் பற்றி நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும். நன்னாளில் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.காமராஜரைப் போன்று தற்கால அரசியல்வாதிகள் அரசியலில் தூய்மையும், நேர்மையும் கடைபிடிக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேசினார் விழாவில் சிவா ,சேகர் ,சக்திவேல் முகில்தம்மபிரியன் , சம்பத் , ரவி மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்