மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா தலைமையில் மற்றும் ஆசிரியர்கள் வேல்முருகன் சங்கீதா தனலட்சுமி நாராயணன் அரசு மகேஸ்வரி ராஜா ஆறுமுகம் ராஜாராம் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்மக்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அப்போது அப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்ததால் முகாமில் பங்கேற்ற மேல் பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்களும் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று காமராஜர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்