Home செய்திகள் உசிலம்பட்டி அருகே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கே.நாட்டாபட்டி கிராமத்தில் ஏ-5511 நாட்டாபட்டி தொடக்க வேளாண்மைச்சங்கத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கு விவசாயிகளுக்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கொள்முதல் செய்யப்பட்டு 6 நாட்களாகியும் இதுவரை நெல்லை ஏற்றிச் செல்ல லாரி வரவில்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது முறையான பதில் இல்லை.மேலும் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்வதை விரும்பாத சில நெல்வியாபாரிகள் ஆளுங்கட்சி பிரமுகர்களின் உதவியுடன் விவசாயிகளை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிற்து.

இதனைக் கண்டித்தும் நெல் கொள்முதல் மையத்திலிருந்து நெல்மூடைகளை ஏற்றிச் செல்லப்ப்படாததைக் கண்டித்தும் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவமறிந்த வாலாந்தூர் போலிசார் விவசாயிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com