Home செய்திகள் கண் அறுவை சிகிச்சையில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை; கண்காணிப்பாளர் பாராட்டு..

கண் அறுவை சிகிச்சையில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை; கண்காணிப்பாளர் பாராட்டு..

by mohan

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் 100 கண் அறுவை சிகிச்சைக்கும் மேல் சிறப்பாக செய்து கண் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில், கண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்டும் விதமாக விழா நடைபெற்றது.

அதில் கண் அறுவை சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உறுதுணையாக இருந்த அனைவரையும் இனிப்புகள் வழங்கி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் பாராட்டினார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர், அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். விரைவில் தென்காசி அரசு மருத்துவமனையில் கண் வங்கி (Eye bank)தொடங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவிட் இரண்டாம் அலைக்கு பின்னர் கண் பிரிவு அருகே அரங்கில் கண்புரை அறுவை சிகிச்சையும் தொடங்கப்பட்டு கண் அறுவை சிகிச்சை பிரிவு தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கடந்த மாதம் 100 அறுவை சிகிச்சைக்கு மேல் திறம்பட அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த கண் மருத்துவர் ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் ஆலிஸ் ரூத் மேரி இருவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் இனிப்புகள் வழங்கி, வெகுவாக பாராட்டினார். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் கண்புரை உதவியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.தென்காசி மருத்துவமனை கண் பிரிவு சிறப்பாக நடைபெற அனைத்து உதவிகளையும் வழங்கி கொண்டிருக்கும் திட்ட இயக்குனர் மருத்துவர் சந்திரகுமார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ராஜலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி வசந்தி, செவிலியர்கள் ஸ்ரீகலா, கோகிலா, ஆனந்த ஜோதி, மதிவாணன், கண்புரை உதவியாளர்கள் ராமசுப்பிரமணியம், பைசல் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் அகத்தியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!