Home செய்திகள் அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

by mohan

தமிழகம் முழுவதும் பொங்கல் பொங்கும் மங்கள நாளில் வீடுகள் தோறும் பொங்கல் பானைகளில் கொத்துமஞ்சள் கட்டி பொங்கல் வைப்பது தமிழர்களின் பாரம்பரியம். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மதுரைமாவட்டம், அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் செடிகள் கொத்து மஞ்சளாக 6 மாதங்களிலும், சமையல் பயன்பாட்டிற்கு ஓராண்டிலும் அறுவடை செய்யப்படுகிறது. வயலில் பறிக்கபடும் மஞ்சள் செடிகள் கொத்துக்களாக பிரிக்கப்பட்டு மதுரை உட்பட வெளி மாவட்டங்களுக்கும், குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.  கொத்துமஞ்சளுக்காக 6 மாதத்தில் அறுவடை  செய்வதால் ஏக்கருக்கு ரூ. 60,000 என செலவு குறைவதாகவும், இந்த வருடம் ஓரளவு மழை பெய்ததால் விளைச்சல் அதிகளவில் உள்ளதாகவும், பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் வயலுக்கே வந்து கொத்து மஞ்சளை கொள்முதல் செய்வதால், மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் விளைச்சலில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!