
தமிழகம் முழுவதும் பருவமழை முன்னிட்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு கிராமங்களிலும் சாக்கடை, மற்றும் வடிகால் கால்வாய் பகுதியை தூர்வார வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள 24 வார்டுகளிலும் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது, இதற்கு இன்று ரோட்டரி கிளப் சார்பில் ஒரு நாள் செலவை ரோட்டரி கிளப் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என அந்த சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜயோகம், பொருளாளர் கார்த்தியசாமி, துணை கவர்னர் சேகர், மூத்த உறுப்பினர் ராஜேந்திரன், மற்றும் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரிடம் ஒருநாள் செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். உடன் பொறியாளர் முத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சரவணப்ரபு,சசிகலா, மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.