Home செய்திகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின்19 குழந்தைகளுக்கு நிவாரணம் அமைச்சர் வழங்கினர்.

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின்19 குழந்தைகளுக்கு நிவாரணம் அமைச்சர் வழங்கினர்.

by mohan

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் 19 குழந்தைகளுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 59 இலட்சத்திற்கான காசோலையினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி.மூர்த்தி, மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும் வைப்புத்தொகையாக வழங்கிடவும், பாதுகாப்பாளர்களுக்கு குழந்தைகளை வளர்க்க மாதந்தோறும்.ரூ.மூன்றாயிரம் மட்டும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.மேலும், தாய், தந்தை இருவரையும் இழந்து பாதுகாப்பாளர்கள் இல்லாமல் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பாதுகாப்பாக குழந்தைகள் இல்லத்தில் அனுமதித்து, இலவச கல்வி, உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிட்டுள்ளார்கள்.அதனடிப்படையில்,மதுரைமாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 குழந்தைகளுக்கு .ரூமூன்று இலட்சம் மட்டும் , தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த1 குழந்தைக்கு ரூ. ஐந்து இலட்சம் மட்டும்)-மும் ஆக மொத்தம்19 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 59 இலட்சத்திற்கான காசோலையினை , வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி.மூர்த்திமற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் திரு.கா.ப.கார்த்திகேயன்சட்டமன்றஉறுப்பினர்கள்கோ.தளபதி (மதுரை வடக்கு) திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மாவட்ட வருவாய் அலுவலர்கோ.செந்தில் குமாரிமற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கணேசன் உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!