ராஜக்காபட்டி பகுதியை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சித்ரா பால்ராஜ். ,இவர் தனது பகுதியில் பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் இன்று 200க்கும் மேற்பட்ட மா பலா, வேம்பு, அரசமரம். உள்ளிட்ட மரங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ராஜக்காபட்டி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் முன்னிலையில்  ராஜக்காபட்டி ஊராட்சி பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் 58 கிராம இளைஞா்கள் குழுவைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஜெயப்பிரியா முன்னாள் துணைத்தலைவர் மருதபாண்டி முன்னாள் பொறுப்புத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.கிராமத்தை சோலை வனமாக மாற்றும் நோக்கில் பசுமையை நோக்கி ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா