
திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் தமிழ் அரங்கில் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மகிழம் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மேலும் முருகையன் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மகிழம் தமிழ் சங்கத்தின் தலைவரும் சீனி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி ராமன் அவர்களும் மூத்த பத்திரிகையாளர் முருகேஷ் அவர்களும் மூத்த பத்திரிகையாளர் சித்தார்த்தன் அவர்களும் பாரத் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமு அவர்களும் வழக்கறிஞர் பாசறை பாபு அவர்களும் சிறப்பு விருந்தினர்களா கலந்து கொண்டு ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்களை கௌரவம் செய்தனர் அதில் சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் அழ உடையப்பன், நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் சு வாளா வெட்டி முன்னாள் தலைமையாசிரியர் அமராவதி முருகையன் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை நல்ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவப்படுத்திநார்கள் மேலும் இவ்விழாவின் முடிவில் வழக்கறிஞர் சுரேஷ் நன்றியுரை கூறினார் இவ்விழாவில் பல்வேறு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
You must be logged in to post a comment.