
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியினை நெல்லை அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண் தானத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் விதமாக ஓவியப்போட்டி, வாசகம் எழுதும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய பள்ளி தலைமை வகித்தார். ரோட்டரி வருங்கால ஆளுநர் முத்தையா பிள்ளை போட்டிகளை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர். அனிதா வேணுகோபால், உதவி ஆளுநர் ரேமண்ட், பாட்ரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் புதன் கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவரால் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.