58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்ககோாி தலைமை பொறியாளாிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் கடந்த இரு முறை சோதனை ஓட்டம் நடைபெற்ற பொழுதும் 33 கண்மாய்களுக்கும்  தண்ணீா் சென்றடையததால் திட்டம் முழுமை அடையவில்லை.இந்நிலையில் வைகை அணையின் நீா் மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் கால்வாயில்  மீண்டும் சோதனை ஓட்டம் நடத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.இந்நிலையில்58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து 35 கண்மாய்களையும் நிரப்பி முழு சோதனை ஓட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று தலைமை பொறியாளர் பாலகிருஷ்ணனை (பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரம்) சந்தித்து மனு அளிக்கப்பட்டது.மேலும் உசிலம்பட்டி யில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள கண்மாய்களின் கரைகளில் அறிவிப்பு பெயர் பலகை வைத்திட வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் மராமத்து பணியின் போது கரையின் இரு புறங்களிலும் மரகன்றுகள் நட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….மனுவை விசாாித்த அதிகாாி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இந்த வருடம் 58 கிராம கால்வாயில் முழு சோதனை ஓட்டத்தை நிறைவேற்றி தருகிறோம் என்றும் உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில் 58 கிராம கால்வாய் இளைஞா் குழுவைச் சோ்ந்த சௌந்திரபாண்டியன் பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..