10-லட்சம் மோசடி வழக்கில் நாகமலை புதுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளர் உட்பட்ட 5-பேர் மீது வழக்குபதிவு., குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இந்திராநகரை சேர்ந்த அர்ஷத் என்ற நபர் கடந்த 5ஆம் தேதியன்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்த போது அவரது சகோதரர் கூடுதலாக 5-லட்சம் தேவை என கூறிய நிலையில்., திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி என்பவரிடம் 5-லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிவருமாறு கூறியுள்ளார்.இதனையடுத்து மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே பணத்தை பெறுவதற்காக காத்திருந்த போது பாண்டி மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பவர் வந்த நிலையில் உக்கிரபாண்டி என்ற முதியவர் வட்டிக்கு பணத்தை தருவதற்கான ஆவணத்தை எடுத்துவருவதாகவும் அதனால் காத்திருப்பதாகவும் கூறினர்.இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்தபோது திடிரென காவல்துறை வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவரது ஓட்டுனர் இருவரும் கார்த்திக் மற்றும் பாண்டியை வாகனத்தில் ஏற்றியபோது அர்ஷத் கையில் 10லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்த பணத்தை கார்த்திக் பறித்து ஆய்வாளரின் ஓட்டுனரிடம் வழங்கியுள்ளார்.இதையடுத்து காவல் ஆய்வாளர் வசந்தியிடம் 10லட்சம் ரூபாய் பணம் என்னுடையது என கூறி கேட்டபோது அர்ஷத் மீது தங்கம் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குபதிவு செய்வேன் என கூறி கார்த்திக், பாண்டி ஆகிய 3பேரையும் காவல்துறை வாகனத்தில் அழைத்துசென்று சிறிது தூரத்தில் இறக்கிவிட்ட நிலையில் பாண்டி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை மட்டும் அழைத்துசென்றுள்ளார்.தொடர்ந்து பணத்தை இழந்த அர்ஷத் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்ட போது தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு வருவதாக கூறிவிட்டு பணத்தை தராமல் மிரட்டி பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அர்ஷத் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அளித்த புகாரையடுத்து நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி, குண்டுபாண்டி, சிலைமான் பகுதியை சேர்ந்த உக்கிரபாண்டி ஆகியோர் மீது பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.இந்நிலையில்., குற்றம் சுமத்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கள் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மோசடி வழக்குபதிவு செய்யப்பட்ட பெண்காவல் ஆய்வாளர் வசந்தி் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞரை தாக்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்