Home செய்திகள் செங்கம் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

செங்கம் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரடாப்பட்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள் இவர்கள் தொழுது வரும் ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெள ஷான் பாய் என்பவர் ஜமாத் பட்டியல் தலைவராக இருந்துள்ளார் அன்றிலிருந்து ஜமாத்திற்கு சொந்தமான இடம் பொருட்களை கையாடல் செய்ததாக தற்போது உள்ள ஜமாத் பட்டேல் தலைவர் யாசின் முத்தவல்லி மற்றும் ஜமாத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அவரை நீக்கியுள்ளனர் இதில் முன் விரோதத்தை கொண்ட கௌஷான் பாய் தரப்பினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பே அப்பகுதியிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை வரவழைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் அது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது நிலை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் ஜாமினில் வெளிவந்த கௌபாய் தரப்பினர் பழைய முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் கௌஷான்பாய் உறவினரின் திருமணத்திற்கு பாம்பே வில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து பகுதி முழுவதையும் நன்கு தெரிந்துகொண்டு மதியம் 2 மணி அளவில் உருட்டுக்கட்டை இரும்பு கம்பி கற்கள் உள்ளிட்ட பொருட்களோடு சுமார் 25க்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் குடியிருப்பில் நுழைந்து பெண்கள் ஆண்கள் கர்ப்பிணி uபெண்கள் குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் தாக்கி வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்ட பொருட்களை கண்மூடித்தனமாக அடித்து உடைத்துள்ளனர் அப்போது தாக்குதலில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை துரத்த முயன்றபோது அனைவரும் வீட்டில் பதுங்கிக் கொண்டு தலைமறைவாயினர் தகவலறிந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி மற்றும் கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 25 நபர்களை கைது செய்து சாத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதேபோன்று முன்விரோதம் காரணமாக அடிக்கடி அடி ஆட்களோடு தங்களது பகுதியில் நுழைந்து கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி விட்டு பாம்பிற்கு தப்பிச் சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தரடா பட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!