
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 8 வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகில் நகராட்சி கல்வி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது அதன் முதல்கட்டமாக பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பேசிய MLA , தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் இராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் அதுபோல் தொடர்ந்து தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து நகராட்சி உரக்கிடங்கையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள் பொறியாளர் தங்கப்பாண்டி காவல் ஆய்வாளர் முத்துகுமார் இராஜபாளையம் நகர பொறுப்பாளர்கள் P.ராமமூர்த்தி S.A.மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர் ஷ்யாம்ராஜா மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.