மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு அனாதையாக இறந்து கிடந்த பிச்சைக்காரர் முதியவரிடம், ரூபாய் 20 இலட்சம் வங்கி |யில் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு 36 லட்ச ரூபாய் வங்கியிலிருந்து எடுத்துள்ளார். மொத்தம் ஒரு பிச்சைக்காரரிடம் 56லட்ச ரூபாய் இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலையில், மதுரை மாவட்டத்திலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை என்பது பெரும்பாலான உயர்ந்திருக்கிறது.முதியவர்கள் உழைக்க முடியாத காரணத்தினால், பிச்சை எடுப்பது வழக்கமான ஒன்று அதேசமயம், மனநிலை குன்றிய அவர்களும் அவர்தம் இல்லங்களில் இருந்து விரட்டி விடுவதால், உணவுக்கு வேறுவழியின்றி பிச்சை எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றுதான் .சில முதியவர்கள் பிச்சை எடுக்கும் பணத்தை தன் குடும்பத்திற்கு மட்டும் அல்லாது பேரன் பேத்திகளுக்கு கொடுத்தும் மகிழும் காரணமும் உண்டு. இதனையும் கடந்து பிச்சை எடுத்த பணத்தை, வைரஸ் தொற்றுக்காக தூத்துக்குடியை சேர்ந்தமுதியவர் பூல் பாண்டி என்பவர், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த காலகட்டங்களில் 3 லட்சத்திற்கும் மேலாக நிதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ,சிறந்த சமூக சேவகர் என்ற விருதையும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார்.இதுபோன்று, ஒவ்வொரு கோணத்திலும் பிச்சை எடுப்பவர்கள் உடைய வாழ்க்கை என்பது விரிந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில்தான்,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுழைவாயிலில் முன்பு ஒரு முதியவர் இயற்கை மரணமடைந்திருக்கிறார் .இதனை அறிந்த, காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு ,அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, இரண்டு வங்கி பாஸ்புக் அவரிடம் இருந்து இருக்கிறது.இதனைப் பரிசோதித்த, போதுதான் அந்த வியப்பூட்டும் சம்பவம் என்பது தெரிந்திருக்கிறதுஅதனடிப்படையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவர்தம் வங்கியில் 36 லட்ச ரூபாய் மொத்தமாக எடுத்திருக்கிறார்இதுபோல இன்று வரை அவருடைய வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் இருக்கிறது.தற்போதைய, விசாரணையில் இவர், மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது குடும்பத்தார் ஏதேனும் இவரை வஞ்சித்து விரட்டி விட்டனரா அல்லது ஏதேனும் மனம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாரா, என்பது போலீஸ் விசாரணையில், தான் தெரியவரும்.இருப்பினும் கூட, பிச்சை எடுக்கும் ஒரு முதியவரிடம் ரூபாய் 36 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பதை அறிந்த, மதுரை மாவட்ட மக்கள் வியப்பை அடைந்துள்ளனர் என்று சொன்னால், மிகையாகது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.