Home செய்திகள் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்:

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்:

by mohan

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது.ஆனால் ,திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் படவில்லை.அந்த வகையில் திமுக அரசின் ஏமாற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில், அவனியாபுரம் 58-வது வார்டு வட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் தலைமையில், பகுதி செயலாளர் முருகேசன் முன்னிலையில், அவைத் தலைவர் மாரியப்பன், துணைச்செயலாளர் திரவியம், வட்ட பிரதிநிதி குருமூர்த்தி, இலக்கிய அணித் தலைவர் மார்க்சின் டிமிட்ரோ பகுதி பொருளாளர் கண்ணன் உட்பட அதிமுகவினர், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அலங்காநல்லூரில்…..தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி,அலங்காநல்லூரில்,அதிமுக ஆர்ப்பாட்டம்:மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, விடியல் தி.மு.க அரசினைக் கண்டித்து, ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில், நகர் செயலாளர் அழகுராசா – கூட்டுறவு சங்கத் தலைவர் பாலாஜி, தொழில் அதிபர் தண்டலை பன்னீர்செல்வம் நாட்டாமை சுந்தர், ராகவன்/பாஸ்கரன் / அரங்கநாதன், செல்வம், தாமரை பாண்டி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.///மதுரையில் திமுக அரசு கோரிக்கையை களை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர்:மதுரை:திமுக தேர்தலின் போது,குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம்,பெட்ரோல் மற்றும் டீசல்,சமையல் எரிவாயு ஆகியவை குறைக்கப்படும் என, திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின்,தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார்.தேர்தல் பரப்புரையில், தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி,மதுரை கோரிப்பாளையம் தில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகம் வாசலில்,முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் சமூக இடைவெளி விட்டு பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,எம்.எல்.ஏ.வுமான,செல்லூர் கே. ராஜூ பேசியது:அதிமுக அரசானது,சொன்ன திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றியுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை,அதிமுக, மத்திய அரசு சுமூக உறவு வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியது.மதுரை நகரில் பல பாலங்கள், பெரியார் பஸ் நிலைய விரிவாக்கம்,தமுக்கம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டன.திமுக அரசானது,மக்கள் மத்தியில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.///தமிழகத்தில் வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது என அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுக்க திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சியினரை வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில்,திமுக அரசை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக குறித்து கடந்த பொதுத் தேர்தலில் திமுக மக்களிடம் பொய் பிரச்சாரங்கள் செய்தும், பொய் வாக்குறுதிகளை அளித்தும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஆன பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,சமையல் கேஸ் ரூபாய் 100 மானியம், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி,சைக்கிள் உள்பட 16 வகையான பொருட்கள் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.மேலும் நீட் தேர்வு ரத்து என கூறி மாணவர்களை ஏமாற்றி இந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.இதனை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன் முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!