Home செய்திகள் உசிலம்பட்டி – இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு செய்த தவறை திமுக அரசும் செய்யவேண்டாம் என அஇபாபி பசும்பொன் கட்சியின் மாநிலத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உசிலம்பட்டி – இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு செய்த தவறை திமுக அரசும் செய்யவேண்டாம் என அஇபாபி பசும்பொன் கட்சியின் மாநிலத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

by mohan

உசிலம்பட்டி – இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு செய்த தவறை திமுக அரசும் செய்யவேண்டாம் என அஇபாபி பசும்பொன் கட்சியின் மாநிலத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5சதவீதமும், சீர்மரபினருக்கு 7.5சதவீத இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தென்மாவட்டங்களில் பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக ஆட்சியை இழந்ததது. அதற்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு விவகாரம் தற்போது உள்ள திமுக ஆட்சியில் அரசானை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தள்ளது. இதற்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் தமிழ் மாநிலக்குழு மாநிலத்தலைவர் அல்லிக்கொடி தலைமையில் கட்சி நிர்வாகிகள் அரசானைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அஇபாபிபசும்பொன் கட்சி மாநில தலைவர் அல்லிக்கொடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு சமுதாயதினருக்கு 10.5 சதவீதமும், 68 சமுதாயத்தினரை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய திமுகவை வன்மையாக கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அரசு செய்த தவறையே தற்போது திமுக அரசும் செய்த வருவதாகவும், சீர்மரபினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ததால் தான் அதிமுக ஆட்சியை இழந்ததது எனவும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையாக இடஒதுக்கீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துனர்.

உசிலைசிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!