பெட்ரோல் பங்க் அருகே மிகப்பெரிய ஆபத்து காத்து இருக்கு பெரும் விபரீதம் நடக்கும் முன் காய்ந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி??

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருமாள் மேஸ்திரி வீதி சந்திப்பு பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது . இதன் அருகே மற்றொரு பங்கு இருக்கிறது மேலும் அருகே ஒரு வங்கியின் தலைமை அலுவலகமும் மற்றும் எல்ஐசி உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்படும் காம்ப்ளக்ஸ் ஒன்றும் உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக மரக்கிளைகளை வெட்டி பெட்ரோல் பங்க் அருகில் குவித்து வைத்து உள்ளார்கள் இதை அகற்றுவதற்கு மாநகராட்சியும் மின்வாரிய ஊழியர்களும் முன்வரவில்லை இதனால் அந்த மரக்கிளைகள் ஆனது காய்ந்து பெட்ரோல் பங்க் ஒட்டிய உள்ளது யாரேனும் சிகரெட் துண்டுகளை அதில் போட்டால் தீ பிடிக்கும் அபாயம் உள்ளது இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது அசம்பாவிதம் நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் ஒரு மின்மாற்றி அருகே இதேபோன்று மரக்கிளைகள் இருந்துள்ளது யாரோ ஒருவர் சிகரெட் போட்டுவிட்டுப் போய்விட்டார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது பொழுது தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தனர் எனினும் மின்மாற்றி தீயில் எரித்து கருகியது இது போன்ற அசம்பாவிதம் நடக்கும் மாநகராட்சி நிர்வாகமும் மின்வாரிய நிர்வாகம் உரிய முறையில் பேசி யார் குப்பைகளை அகற்றுவது என உரிய தீர்வு காண்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்