கீழக்கரையில் ஆக்கிரமிப்பு இடங்களை அரசு துறையினர் மீட்கும் பணி தீவிரம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளுக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்துவந்தனர். அதை அகற்றும் பணியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், கீழக்கரை மன்டல துணை வட்டாட்சியர் பழனி குமார், நெடுஞ்சாலை மற்றும் சமூக பாதுகாப்பு சட்ட வட்டாட்சியர் சீனிவாசன், ஏர்வாடி காவல் ஆய்வாளர் கஜேந்திரன், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், கீழக்கரை நகர் வரைபட ஆய்வாளர் ஹபீப் ரஹ்மான், துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் இணைந்து சாலையில் ஆக்கிரமிப்பை மீட்டனர்.

இதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஆக்கிரமிப்பு செய்வதைப் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவதால் கடைக்காரர்கள் சுதாரித்துக்கொண்டு கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அவர்களை இரவோடிரவாக மீட்டனர். பின்பு ஆக்கிரமிப்பு நடந்து முடிந்தவுடன் ஒரு வார காலங்களில் மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்துகின்றனர் இதனால் ஆக்கிரமிப்பு முழுவதாக நீக்கப்படவில்லை என்று மன வேதனையுடன் தெரிவித்தனர்.