Home செய்திகள் உத்தப்புரம் பொது இடத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்.போலிசாருடன் வாக்குவாதம்

உத்தப்புரம் பொது இடத்தில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்.போலிசாருடன் வாக்குவாதம்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு இரு பிரிவினரிடையே பிரச்சனை நிலவிவரும் நிலையில் அந்த கிராமத்தில் பாலம் அமைக்க வலியுறுத்திய நிலையில் மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பாலத்தை கட்டுவதற்கு உத்தரவு வழங்கிய நிலையில் இன்று காலை அரசு அதிகாரிகள் தலைமையில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வந்த நிலையில் மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் பாலம் கட்டுவதால் இரு தரப்பு மோதல் நடக்கும் என்பதால் பாலத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்தனர். அப்போது பெண்கள் மற்றும் போலிசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே குழந்தைகளுடன் வந்த தாய்மார்களையும் தரதரவென இழுத்துசென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக எழுமலை போலிசார் அரசுப்பணியை செய்ய விடாமல் அதிகாரிகளை தடுத்தற்காக 3 பெண்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

உசிலை  சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com