சுரண்டை அருகே டிப்பர் லாரி பைக் மீது மோதி விபத்து..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது.வாகனத்தை ஓட்டி வந்தவர் காயமடைந்தார். சுரண்டையை அடுத்த கீழ சுரண்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முதல் மகன் எபனேசர் (வயது 25). நேற்று காலையில் தனக்குச் சொந்தமான பைக்கில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ஒரு சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றுவிட்டு மதியம் 12 மணியளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். பைக் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் கால் பகுதியில் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து வந்து எபநேசரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். டிப்பர் லாரி ஓட்டி வந்த டிரைவர் மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 30) சுரண்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்