அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டஅம்மா மினி கிளினிக் பூட்டி கிடக்கும் அவலம் – மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வரிச்சியூர் கிராம மக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் மதுரை சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரிச்சியூர் கிராமம்.வரிச்சியூர் கிராமத்தை சுற்றி 20க்கும் மேற்பட்ட சிறுசிறு ஊராட்சிகள் உள்ளன.வரிச்சியூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவ தேவைக்கு செல்லவேண்டுமென்றால் அருகிலுள்ள பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும்.எனவே வரிச்சியூர் மற்றும் சுற்றுப்புறகிராம மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1970ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணநிதி கிராம பொது மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார், அதனை தொடர்ந்து 1971ம் ஆண்டு மருத்துவமனையை திறந்துவைத்தார்.அதன்பிறகு தொடர்ந்து செயல்பட்டு வந்த இம்மருத்துவமனை கடந்த சில வருடங்களாக இம்மருத்துவமனை செயல்படாமல் இருந்து வருகிறது.இதனால் கிராம மக்கள் மருத்துவ தேவைக்கு மதுரைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதோடு சிரமபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ல் வரிச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர் (அதிமுக) முத்துச்செல்வி சரவணன் சீரிய முயற்சியின் பயனாக அம்மா மினி கிளினிக் ஆக கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டது.இதனையடுத்து தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டதுஎனவே வரிச்சியூர் கிராம பொது மருத்துவமனையை மீண்டும் திறந்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் வரிச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்செல்வி சரவணன் மற்றும் சுற்றுப்புற 22 கிராம மக்கள் சார்பாகதமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்