
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் செங்கம் வட்டார தலைவர் ஆறுமுகம் சங்கர் ஆகியோர் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாத உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத் திறனாளிகளை உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைக்க கோரியும் மனு கொடுத்துள்ளனர் இந்த மனுவின் மீது ஒரு ஆண்டாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளிகள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து செங்கம் வட்டாட்சியர் மனோகரன் அவர்களை நேரில் அழைத்து குறைகளை கேட்டறிந்தார் அப்போது கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி செங்கம் வட்டாட்சியரிடம் முறையிட்டனர் இதன் அடிப்படையில் முதல் கட்டமாக சுமார் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய்க்கான ஆணையை வட்டாட்சியர் மனோகரன் வழங்கினார் மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் ஓய்வு இதயத்திற்கான ஆணை வழங்கப்படும் என உறுதி அளித்ததால் மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்
You must be logged in to post a comment.