உசிலம்பட்டி – காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது

மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்த நாளையொட்டி அனைத்து பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் காந்தி சரவணன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் முன்னிலையில் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா