
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ளது அரசு பொது மருத்துவமனை. அனைத்து வசதிகளும் நிறைந்த இந்த மருத்துவமனையில் தற்பொழுது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் அதிகளவு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதும் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை என்று கேள்விப்பட்டு திரும்பி செல்வதுமான நிலை உள்ளது. இன்றும் பெருமளவு தடுப்பூசி போட மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது.தற்பொழுதும் தடுப்பூசி மருந்து இதுக்கு இல்லாததால் மருந்து வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கின்றனர்.மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையில் தாலுகா தலைமை இடத்தில் வாடிப்பட்டி அமைந்துள்ளது.,மதுரை மாவட்ட கிராம பகுதிகள் மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்ட கிராமப்புறங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவு சிகிச்சைக்காக இங்கு வருவதால் காலை நேரங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறது . இந்த சூழ்நிலையில் தற்போது தடுப்பூசி போட படுவதால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் வழங்க முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.