
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எஸ்ஓஆர் பெட்ரோல் பல்க் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் எஸ்ஒஆர்.இளங்கோவன் தலைமையில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் காந்திசரவணன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, மாவட்ட துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.