
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் அருகில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.வரலாறு காணாத பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இதேபோல் டீசல் விலையும் உயந்துள்ளது. மேலும் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் குமார் தலைமையில் மாட்டு வண்டியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் இந்த விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி தொடர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் மத்தியஅரசு நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை குறைக்க தவறிய தன் விளைவாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.அனைத்து தரப்பு மக்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டிப்பதுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஆசை முஷிர், வட்டார தலைவர் சுப்பிரமணி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.