
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அடுத்து உள்ள கீழக்குயில்குடி சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி வினிதா இவர்களது 3 வயது குழந்தை ஜானு இவள் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள் அப்பொழுது ஊராட்சி மன்றம் அருகே உள்ள கழிவுநீர் மூடி உடைந்து நிலையிலிருந்த இருந்துள்ளது எதிர்பாராதவிதமா உடைந்திருந்த கழிவுநீர் தொட்டியில் ஜானு கீழே விழுந்தாள் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் எனினும் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக பலியானார் ஊராட்சி மன்ற பலமுறை முறையிட்டும் கழிவுநீர் தொட்டியை சரி செய்யவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது இந்த நிலத்தில் ரமேஷ் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…. ஊராட்சி மன்ற அலட்சியத்தால் கழிவுநீர் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து பலியானது கீழக்குயில்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.