திறக்கப்படுமா கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம்??…அவதியில் பொதுமக்கள்..

பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மாதங்கள் பல கடந்தும் திறக்கப்படாமல் இருக்கும் கீழக்கரை சேர்மன் சதக் சாலை அஞ்சலகம். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

ஹமீதியா பெண்கள் மேனிலைப்பள்ளி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி மற்றும் 500 பிளாட் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலகுவாக இருக்கும் இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்?

மாதாந்திர சேமிப்பு பணம் செலுத்துவதற்காக கீழக்கரை தலைமை அஞ்சலகம் சென்றால்…அங்கே இருக்கும் கணக்குதாரர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அங்குள்ள அலுவலர் இருக்கிறார். பள்ளி ஆசிரியைகள், பொதுமக்களின் அலைச்சலை தவிர்க்கும் வகையில் உடனடியாக சேர்மன் சதக் சாலை அஞ்சலகத்தை திறக்க வேண்டுமென கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.