கீழக்கரையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் காங்கிரஸ் சார்பில் நகர் தலைவரும் தில்லையேந்தல் ஊராட்சிமன்ற தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மத்திய அரசு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்டத் துணைத் தலைவர் அஜ்மல் கான், நகர் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், முருகானந்தம், கார்த்திக், சித்திக், மூர் அசனுதீன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.