டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்ட வீரருக்கு கீழக்கரை உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பாக பாராட்டு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 2021 யல் ஜப்பான்-டோக்கியோவில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் நாகநாதன் பாண்டியை வாழ்த்தி ஊக்குவிக்கும் முகமாக கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பாக சென்னையில் உள்ள UHMS கம்யூனிட்டி ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் யூசுப் சாகிபு,  சதக் அன்சாரி, முஜீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில்  நாகநாதன் பாண்டியின் பெற்றோரிடம் விளையாட்டுதுறை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் UHMS சங்கத்தின் லாபிர், செய்யது அப்துல் காதர், மஹ்புப், அக்பர் அலி, சல்மான், சுபைர், ஹமீது அப்துல் காதர், மாசூக், ஆசிக், யஹ்யா, முபாரக், சபீக், ரிபாய், ksc சார்பாக கபீர் இஞ்சினியர் மற்றும் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்கள்,  முக்கியஸ்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உதவி தலைவர். முஜீப்,  நாகநாதனின் வெற்றிக்கு வாழ்த்தி, நாடு திரும்பும் நாளில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியால் உண்டாகப்ப போகும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இந்நிகழ்வை கபீர் ஒருங்கிணைப்பு செய்தார்.