திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்: முன்னாள் அமைச்சர்.

மதுரை சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சி பகுதியில்,அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.இதில், கலந்து கொண்ட கூட்டுறவுதுறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது:- திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. அதனால், திமுக அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் ,தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது .மேலும், திமுக அமைச்சர்களின் தொகுதியில் மட்டும் தடுப்பூசிகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யபடுவதால், எதிர்கட்சியினரின் தொகுதி மக்கள் புறக்கணிக்கபடுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து தொகுதி மக்களையும் சமமாக பார்க்கவேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்கின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, குளறுபடிகளை தவிர்க்க வேண்டும்.ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல தமிழக வீரர்கள் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மேலும், அதிமுக கூட்டணி கணக்கு சரியில்லாததால் தான் தேர்தலில் தோல்வி என்ற சி வி சண்முகத்தின் கருத்து குறித்து கேட்டதற்கு பாஜகவை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என்றும்நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் உங்களுக்குத் தான் வாக்களித்தோம் நீங்கள் எப்படி பின்னடைவை சந்தித்தீர்கள் என்று கேட்கின்றனர் என பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..