உசிலம்பட்டியில் சூப்பர் மார்க்கெட்டில் மக்களோடு மக்களாக நின்று பொருட்கள் வாங்கிய கோட்டாச்சியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோட்டாட்சியராக பணியாற்றி வருவபர் ராஜ்குமார். இவர் உசிலம்பட்டி வண்டிப்பேட்டையில் உள்ள தனியார் (ரத்தினம் சூப்பர்) மார்க்கெட்டிற்கு காரில் வந்தார். அப்போது திடீரென வந்த கோட்டாட்சியரை பார்த்த கடை ஊழியர்கள் ஆய்வுக்காக வந்திருக்கிறார் என எண்ணி மாஸ்க்கை அவசர அவசரமாக மாட்டிக்கெண்டனர். ஆனால் கோட்டாட்சியர் ராஜ்குமார் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்துள்ளதாக கூறி அடுக்கில்; உள்ள பொருட்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டு பொருட்களை தேர்வு செய்தார்.

அதனைதொடர்ந்து பொருட்களுக்கான பணத்தை கவுண்டரில் கட்டுவதற்காக மக்களோடு மக்களாக வரிசையாக நின்று பணத்தை கட்டினார். இவரது செயலை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.பொதுவாக அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு அவர்களின் உதவியாளரை பயன்படுத்தி வாங்க சொல்லுவார்கள். இல்லையென்றால் போன் செய்து பொருட்களை வீட்டிற்கே கொண்டு வர சொல்லுவார்கள். ஆனால் கோட்டாட்சியர் பொறுப்பில் உள்ள ராஜ்குமார் பந்தா எதுவும் இல்லாமல் எளிமையாக தனக்கு தேவையான பொருட்களை தானே நேரில் சென்று பொறுமையாக வாங்கி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது

உசிலை சிந்தனியா