
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும்.நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு ஏராளமான கிராமங்கள் உள்ளன.தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து பகுதி மக்களும் நிலக்கோட்டை வந்து செல்லும் அளவிற்கு அனைத்து அரசு அலுவலகமும் இந்த பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நிலக்கோட்டை வட்டாட்சியராக தற்போது பொறுப்பேற்றிருக்கும் டி.தனுஷ்கோடி ஏற்கனவே நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளராகவும் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராகவும் சிறப்பான முறையில் பணியாற்றி நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் ஆவார். மக்களின் குறைகளை தீர்ப்பதிலும் தனது பணிகளை திறம்படச் செயல்படுத்துவதிலும் மிகவும் திறமை வாய்ந்தவர். நிலக்கோட்டை பகுதி மக்களும் வட்டாட்சியர் அலுவல ஊழியர்களும் இவரது வருகையை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பகிர்ந்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.