Home செய்திகள் உசிலம்பட்டியில் பழனிசாமி முதல்வர் பதவிக்கு பாம்பு, பல்லி மாதிரி தவந்து, ஊர்ந்து போனாரா எனவும், பாம்பு, பல்லி இல்லை அவர் ஒரு பச்சோந்தி என தேவர்சிலை முன்பு அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்.

உசிலம்பட்டியில் பழனிசாமி முதல்வர் பதவிக்கு பாம்பு, பல்லி மாதிரி தவந்து, ஊர்ந்து போனாரா எனவும், பாம்பு, பல்லி இல்லை அவர் ஒரு பச்சோந்தி என தேவர்சிலை முன்பு அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்.

by mohan

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் மகேந்திரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கிடையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மக்களிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது மக்களிடையே பேசிய டிடிவி தினகரன் தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதற்காக கண்ணீர் வடித்தாரே, ஆனால் முதல்வர் பதவிக்கு உட்கார வைத்துவிட்டு சசிகலா ஜெயிலுக்கு போனாரே அதை நினைத்து எப்போதாவது அழுதிருப்பாரா எனவும், பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு எப்படி போனார் எனவும், பாம்பு, பல்லி மாதிரி தவந்து ஊர்ந்து போனாரா எனவும் மக்களிடையே கேள்வி எழுப்பினார். மேலும் பழனிசாமி ஒரு பச்சோந்தி எனவும் பேசினார். மேலும் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தன. அப்போது தான் தமிழகத்தில் படுகொலை அதிகம் நடைபெற்றது. மறைந்த கலைஞர் உண்ணாவிரதம் இருக்கபோவதாக கூறி சென்னையில் மெரினா கடற்கரையில் தூங்கி கிடந்தார். கலைஞர் தான் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர். திமுக ஆட்சியில் இரவு நேரங்களில் கடைகளை திருந்து வைக்கமுடியாது திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவார்கள் எனவும், திமுக ஆட்சியில் சட்டஒழுங்கு பிரச்சனை அதிகம் காணப்படும் என பரப்புரையில் டிடிவி தினகரன் பேசினார். 

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!