Home செய்திகள் பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு .

பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு .

by mohan

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.  அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.  அம்மனுக்கு மேளதாளம் முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து முளைப்பாரி திண்ணையில் வைத்து கும்மியடித்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், மலர் அலங்காரம், அபிஷேகம், நடைபெற்று. பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  அம்மனுக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் அக்னிச்சட்டி, பால்குடம், கரகம், மாவிளக்கு, எடுத்து வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.  பத்ரகாளியம்மன் பால்பண்ணை சார்பில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.  மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கொடிமரம் இறக்கி முளைப்பாரி தண்ணீரில் விடும் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com