Home செய்திகள் உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்த திமுகவினர். செய்தி சேகரித்த செய்தியாளரின் செல்போன் பறிப்பு.

உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்த திமுகவினர். செய்தி சேகரித்த செய்தியாளரின் செல்போன் பறிப்பு.

by mohan

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டனி கட்சியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் கதிரவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் உத்தப்பநாயக்கணூர், காமராஜர் நகர், பசும்பொன் நகர், மாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளரை வரவேற்க ஆரத்தி எடுப்பதற்காக சிறுவர்களும், பெண்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆரத்தி தட்டுடன் காமராஜர் நகரில் காத்திருந்தனர். அப்போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் 100ரூபாய் ரொக்க பணம் பட்டுவாடா செய்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்த போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அதனை பார்த்த திமுகவினர் செய்தியாளரிடம் செல்போனை பறித்துகொண்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.உடனே அங்கிருந்த பொதுமக்கள் செய்தியாளரை மீட்டு பத்திரமாக  அனுப்பி வைத்தனா்.தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்த திமுகவினர் சட்டபடடி தேர்தல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினா் மீண்டும் அடாவடியை கையிலெடுத்துள்ளது உசிலம்பட்டியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.இவா்களால் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!