Home செய்திகள் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கண்மாயில் உரிய அனுமதி பெறாமல் ஆளுங்கட்சியினர் மீன் வளர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதால் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கண்மாயில் உரிய அனுமதி பெறாமல் ஆளுங்கட்சியினர் மீன் வளர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டதால் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கொடிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் இப்பகுதியிலுள்ள கொடிக்குளம், உடன்காட்டுப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட 5கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்; ஒருவர் 5கிராம மக்களிடமும் கலந்து பேசி முடிவெடிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து கண்மாயில் மீன் வளர்க்க போவதாக கூறி மணல்தடுப்பு மூட்டைகள், கம்பி வலை கட்டுதல் போன்ற பணிகளில் அவரது ஆட்கள் ஈடுபட்டனர்.

ஆனால் கண்மாயில் மீன்வளர்பதற்காக அரசிடமும் முறையாக அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 5கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பெரியோர்கள் பணிகள் நடைபெறும் கண்மாயில் குவிந்தனர். ஆனாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் முறையாக அனுமதி பெறாமல் மீன் வளர்க்க முயற்சிக்கும் அதிமுக கவுன்சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிடப்போவதாகத் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com