Home செய்திகள் தீப விழா காண்பதற்கு வெளியூர் பக்தர்கள் அனுமதி இல்லை

தீப விழா காண்பதற்கு வெளியூர் பக்தர்கள் அனுமதி இல்லை

by mohan

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டியில் கூறியதாவது;தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி.20ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் 29 ஆம் தேதி தீபம் அன்று பரணி தீபத்மிற்கும், மகாதீபத்திற்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகம விதிகளின் பிரகாரம் கோவிலுக்குள் தேரோட்டம் நடைபெறும்.தேரோட்டத்திற்கு பக்தர்கள். ஆன்லைன் மூலம் பக்தர்கள் பதிவு செய்தபின் கோவிலுக்குள் வரலாம். காலை ஆறு முப்பது முதல் இரவு ஆறு முப்பது மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பக்தர்களும் ஆன்லைன் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 3000 பக்தர்களும் ஆக ஆக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ வசதிக்காக 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். சிறப்பு பேருந்துகள் கிடையாது. மாவட்ட எல்லையில் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் உள்ளூர் வாசிகள் மட்டும் சோதனைச்சாவடிகளில்அனுமதிக்கப்படுவர்.முகவரி அடையாள அட்டை காட்டிவிட்டு உள்ளூர்வாசிகள் உள்ளே வரலாம். தீப விழா காண்பதற்கு வருகின்ற வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகள் கோவில் சார்பாக யூடியூப் சேனல் மூலம் திருவிழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வெளி இடங்களில் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை.அன்னதானம் கோவிலுக்குள் நடைபெறும் அதுவும் பார்சல் செய்து தரப்படும்.மகா தீபம் அன்றும் அதை தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதி இல்லை

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com