Home செய்திகள் உசிலம்பட்டியில் காணொளி காட்சி வாயிலாக விவசாய குறைதீர்ப்பு முகாம்

உசிலம்பட்டியில் காணொளி காட்சி வாயிலாக விவசாய குறைதீர்ப்பு முகாம்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வேளாண் துறை அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக விவசாய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 58 கிராமகால்வாய் இளைஞா் சங்கத்தின் சாா்பில் சௌந்திரபாண்டியன் தலைமையிலான இளைஞா்கள் குழு பங்கேற்றனா்.நிகழ்ச்சியில் அவா்கள் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கான நிரந்தர அரசாணை,பருவமழை அதிகமாகுவதை தொடர்ந்து 58 கிராம கால்வாய் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை,வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்,வனவிலங்கு தாக்குதலில் இருந்து விவசாய பயிர்களை விவசாயிகளை காப்பாற்றிட வனவிலங்கு விரட்டிகான மருந்துகளை மானிய விலையில் உசிலம்பட்டி விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,மலைகளில் இருந்து வரும் ஊற்று நீர் மற்றும் மழைநீர் உரிய கண்மாய்களை வந்தடைய வரத்து கால்வாய்களை சரிசெய்திட வேண்டும் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள வரத்து கால்வாய் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்என்ற கோரிக்கைகளை முன்வைத்தனா்.இதனை காணோளி காட்சியில் கேட்ட மதுரை ஆட்சியா் அன்பழகன் இது குறித்து பாிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

ஆா்வமில்லையா-  அக்கறையில்லையா

விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் குறித்து முன்னரே அறிவிப்பு செய்யப்பட்ட போதும் கூட்டத்திற்கு வர எந்த விவசாய சங்கங்களும் ஆா்வம் காட்டவில்லை.இதனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே விவசாயிகள் காணப்பட்டனா்.அரசு அதிகாாிகள் தங்களின் முக்கியப்பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டத்திற்கு வரும் வேளையில் இது போன்ற ஆள் இல்லாத காரணத்தைக் கூறி அடுத்து வரும் நாட்களில் கூட்டம் நடத்த முற்பட மாட்டாா்கள்.கிடைக்கும் வாய்ப்பை விட்டு விட்டு வாய்ப்பில்லாத போது புலம்வது விவசாயசங்கத்தினருக்கு தேவைதானா என்ற கேள்வி அதிகாாிகள் மத்தியில் எழுந்துள்ளது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com