Home செய்திகள் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் நுண்உர செயலாக்க மையக்கட்டிடத்தை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி திறந்துவைத்தார்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் நுண்உர செயலாக்க மையக்கட்டிடத்தை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி திறந்துவைத்தார்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் நுண்உரங்களை பிரித்தெடுக்கும் மைய கட்டிடத்தினை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைதொடந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை பிரித்தெடுத்து வீடுதோறும் வாங்குவதற்கு பேட்டரியில் இயங்கும் 19 மூன்று சக்கர வாகனம் ரூ 34லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகரசெயலாளர் பூமாராஜா, நகராட்சி பொறுப்பு ஆணையாளர் அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் அகமதுகபீர், மற்றும் நகராட்சி ஊழியர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!