Home செய்திகள் உசிலம்பட்டி அருகே விவசாயம் செழிக்க நெல் நாற்று புடுங்கிய கூலியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

உசிலம்பட்டி அருகே விவசாயம் செழிக்க நெல் நாற்று புடுங்கிய கூலியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

by mohan

பொதுவாக கிராமப்புறங்களில் 100 சதுர அடியில் நிலத்தை தயார் செய்து ஒரு மூட்டை நெல் மணிகளை போட்டு நாற்றாங்கால் அமைப்பர் ஆனால் நெல் நாற்றுக்கள் 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை வளர்ந்தவுடன் அந்த நெல் நாற்றுகளை பிடுங்கி மற்ற வயல்களில் நடவு செய்வர். இதில் ஒரு ஏக்கர் பரப்புக்கு 10 பெண்கள் வீதம் நடவு செய்யும் பணியில் ஈடுபடுவர். இதில் நாற்று பிடுங்க ஆரம்பிக்கும் நாள் முதல் நடவு பணி முடியும் நாள் வரை பெண்கள் பக்தியுடன் விரதமிருந்து நெல் நாற்றுகளை நடவு செய்வர். இதில் நெல் நடவு செய்யும் பெண்களுக்கு ஏக்கர் கணக்கில் சம்பளம் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 2000 ரூ வீதம் வழங்கப்படுகின்றனர். இதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை கோயில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநானை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்ணம்பட்டி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு அதன் மூலம் சேமித்து வைத்த காணிக்கை பணத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.கிராமங்களில் விவசாயம் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பகுதி பெண்கள் நாற்று பிடுங்குவதில் பயபக்தி உடன் வழிபாடு செய்தது கிராம மக்களுக்கும் விவசாயத்தின் மீது பற்று உள்ளது என்பதை குப்பணம்பட்டி விவசாயிகள் சுட்டி காட்டியுள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!